• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்துக் கொண்ட தீவிர ரசிகை..,

ByPrabhu Sekar

Jan 9, 2026

சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சார்ந்த ஐஸ்வர்யா மதன் இவர் சிறு வயது முதல் விஜயின் தீவிர ரசிகை வலது கையில் விஜயின் புகைப்படத்தை டாட்டுவாக வரைந்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக மாறிய பிறகு மாவட்ட மகளிர் அணி தலைமை செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணி மகளிர் அணியில் செயல்பட்டு வருகிறார்.

அது முதல் தீவிர கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்த அவர் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாவதற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் அனகாபுத்தூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அயோத்தி அம்மன் ஆலயத்தில் வேண்டிக்கொண்டு படம் வெளியாக வேண்டும் என நேற்றிக்கடனாக மொட்டை அடித்துக் கொண்டார்

அதனை தொடர்ந்து பேசிய அவர் திரைப்படங்களில் தான் இது போன்று புரட்சி ஏற்படுத்த வேண்டும் என வருபவர்களுக்கு வில்லனாக இருக்கும் ஆளுங்கட்சியினர் தொந்தரவு கொடுப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால் விஜய்க்கு அது அப்படியே நடக்கிறது.

ஜனநாயகம் படம் படம் விரைவில் வெளியாக வேண்டும் என வேண்டிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டதாக தெரிவித்தார்