கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.எடப்பாடி பழனிச்சாமியை இன்று (1.1.2026) சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சந்தித்து வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு அருட் பிரசாதம் மற்றும் அருள்மிகு ஆதிகேசவர் திருவுருவ புகைப்படத்தினை வழங்கி பூங்கொத்து கொடுத்து ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

உடன் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்சன் அவர்கள் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷ்யா_கண்ணன் ஆகியோர் உடனுள்ளார்கள்.




