• Wed. Dec 31st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தூய்மை நகராக மாற்ற மரக்கன்றுகள் நடும் விழா..,

ByKalamegam Viswanathan

Dec 31, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக,

தூங்கா நகர் மதுரையை தூய்மை நகராகவும. பசுமையாக்கும் நோக்கில் பிரம்மாண்டமான மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு கூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவ சமாதி வளாகத்தில் இந்த நற்பணி நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கருணாகரன், மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் பெருமாள் ஆகியோர் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. மேலும்,

மாநில இணைச் செயலாளர் காளையன், மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம் மற்றும் மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்கலையரசன் உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மதுரை வணிகர்களின் பசுமை பாதை என்ற இலக்கின் கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வருங்காலத் தலைமுறைக்கு பசுமையான மதுரையை உருவாக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விழாவின் இறுதியில், நடப்பட்ட மரக்கன்றுகளைப் பராமரிப்பதற்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

வணிகர் சங்க செயலாளர் சிவயோக கருணாகரன் பேட்டியின் போது கூறுகையில்

எங்களுடைய நிறுவன தலைவர் சுதேசி நாயகர் பா வெள்ளையன் அவர்களின் ஆசியோடு இன்று அருள்மிகு சூட்டுக்கோல் ராமலிங்க விலாச சோமப்பா சாமிகளின் சன்னதியிலும் மரக்கன்று நடுவிழா ஏற்பாடு செய்துள்ளோம்.

எங்களுடைய பேரவையின் முக்கிய நோக்கமானது பசுமையை பாதுகாப்போம் பிளாஸ்டிக் நெகிழிப்பை ஒழிப்போம் துணிப்பையை பயன்படுத்துவோம் அது மட்டுமல்லாது வருகின்ற இளைய தலைமுறையிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது எப்படி மற்றும் மரக்கன்று நடுவதால் ஏற்படும் நன்மைகள் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி கூட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்

இந்த கூட்டத்தினுடைய அடுத்த கட்ட நோக்கமானது இது இதோடு நின்று விடாமல் மதுரை மாநகர் முழுவதும் மரக்கன்றுகள் நட செய்து மிக வெக்கமான இருக்கின்ற மதுரை மாவட்டத்தை நல்ல சூழ்நிலை உருவாகும் வகையில் பேரவை என்றென்றும் செயல்படும் அது மட்டுமல்லாமல் மேற்கொண்டு வேலை பேரவையினுடைய நிர்வாகிகள் துணையோடு எப்போதும் நிறைவேற்றும் என்று கூறி விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி கூறுகிறோம்

மதுரை குப்பை மாநகரம் என்ற கேள்விக்கு

நம்முடைய சர்வேவில் மதுரை மாநகரம் குப்பை மாநகரம் என்று அறிவித்திருக்கிறார்கள். மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயம் இது அதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் விஷயமாக கூட நினைக்கலாம். ஏனென்றால் பிளாஸ்டிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர் மக்களுக்கு சுத்தமாக கிடையாது பிளாஸ்டிக்கினால் தொடர்ந்து மக்களுக்கு என்னென்ன நோய் வருகிறது. கேன்சர் போன்ற நோய்கள் வருகிறது அதன் விழிப்புணர்வு ஏற்றும் வயல் தான் என்று குழந்தைகளை எல்லாம் வரவழைத்து இந்த விழாவை ஏற்படுத்தி உள்ளோம் என கூறினார்.