கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
இதை அடுத்து அது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிம்மதி அடைந்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் 23-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை யார் ? எங்கு இருந்து விடுக்கிறார்கள் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
எனவே அடுத்த வெடிகுண்டு மிரட்டல் வருவதற்குள் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.




