• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. கடையநல்லூர் நகரப் பகுதிகளுக்கு முத்துக்கிருஷ்ணாபுரம் சேனைத் தலைவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. பயனாளிகள் தங்கள்  வீடு மற்றும் நிலத்திற்குறிய அசல், நகல், வில்லங்கச் சான்று, பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடைந்தனர்.

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் கம்பநேரி 2 வைரவன்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து மண்டல துணை வட்டாட்சியர் திருமலை முருகனிடம் மனுக்கள் கொடுத்தனர். உடன் கிராம நிர்வாக அதிகாரி ஆரீப்முகமது, ராமச்சந்திரன், சங்கரநாராயணன், நகர சபை சார்பில் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு இ-சேவை மையம் அமைத்து உடனுக்குடன் பயனாளிகளுக்கு  சான்றிதழை சரிபார்த்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை  மண்டல வட்டாட்சியர் திருமலை முருகனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.