• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மலை மேல் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

ByKalamegam Viswanathan

Dec 28, 2025

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பி.டி.ஆர்.நகர்2-வது வை சேர்ந்தவர் ஹரி பிரசாத் ( வயது 25) இவர் நேற்று தென்பரங்குன்றம் பகுதி சார்ந்த திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி உள்ளார்.

பின்னர் அவர் மதுகுடிபோதையில்மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக கூச்சலிட்டுள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைமேல் ஏறி ஹரிபிரசாத்தை மீட்டு அலாக்காக தூக்கி வந்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.