மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாணிக்கம் பட்டியில் கிராம பொதுமக்கள் நொண்டிநாதன் விளையாட்டு குழு மற்றும் மதுரை அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பரிசை தேவசேரி அணியினரும் இரண்டாம் இடத்தை காரியாபட்டி அணியினரும் மூன்றாம் பரிசை நாகமலை புதுக்கோட்டை நான்காம் பரிசு மஞ்சமலை ஐந்தாம் பரிசு மாஞ்சோலை பனிமலர் ஆறாம் பரிசு எஸ்.கே.சதீஷ் நண்பர்கள் அலங்காநல்லூர் ஏழாம் பரிசை காரியாபட்டி பி அணியினர் எட்டாம் பரிசு தருமசானப்பட்டி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மதுரை மாவட்டம், மஞ்சமலை நாடு , மாணிக்கம்பட்டி கிராம நொண்டித்தான் விளையாட்டுகுழு நிவாஸ் , கௌதமன், சரவணன் , சூர்யா, கிஷோர், ராஜவிக்னேஷ், ராகேஷ், ஆகியோர் செய்து இருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக , நேதாஜி மக்கள் இயக்க மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பூண்டி இளவரசன் வழக்கறிஞர் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த கபடி விளையாட்டு வீரர்கள் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.




