அரியலுார் .தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும் வரை ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பெண்கள் கழுத்தில் இனி தங்கத்தில் தாலி இருக்காது மஞ்சள் கயிறு தான் இருக்கும் எனவும் குமுறல்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாத இறுதியில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் தேவை என்றனர். இது குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் வைத்த கோரிக்கை வெங்காயம் தக்காளி விலை தாறுமாறாக ஏறும் போது விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் உலக நாடுகள் தங்கம் விலையேற்றத்தை கண்டுகொள்ளாததால் தங்கம் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க இயலாத சூழல் உருவாகி உள்ளது.

விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை கொடுக்க உலக அளவில் முன்வராத சூழலே நிலவி வருகிறது. தங்கம் விலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு பெரிய விலையேற்றம் கண்டதில்லை. தற்போது இவ்வளவு பெரிய விலையேற்றத்தின் பின்னணியில் கணக்கில் வராத பணம் கொள்ளைபுறமாக சந்தையில் முதலீடாக மாறி வருகிறது. பணம் படைத்தவர்களின் எண்ணமெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். எனவே தங்கம் விலை கட்டுக்குள் கொண்டு வரும் வரை இந்திய பங்குச்சந்தையிலிருந்து தங்கம் ஆன்லைன் வியாபாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தங்களது பெண்களின் திருமணத்தை நடத்த தாலி பயன்படுத்த முடியாது என்ற சூழலில் தாலியில் தங்கத்தை தவிர்த்து மஞ்சள் கயிறு தான் இருக்கும் எனவே மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

உலக தங்க கவுன்சில் ஒரு பவுன் 2 இலட்சத்தை நெருங்கும் என அறிவித்திருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே தங்கத்தை வாங்குவதனை விட மறுசுழற்சி செய்ய மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.




