• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் இலவச அன்னதான சேவை..,

Byஜெ.துரை

Dec 26, 2025

சென்னை கோயம்பேட்டில் கடந்த 2019-முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பசிக்கு உணவளிக்கும் குழுவை சார்ந்த விஜய் ஆனந்த் தலைமையில் இலவச அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இந்த அன்னதானத்தின் 35-ஆவது வாரம் கொண்டாட்டமாக அன்னதானத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவச லுங்கிகள் மற்றும் டீ சர்ட்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பசிக்கு உணவளிக்கும் குழுவைச் சார்ந்த விஜய் ஆனந்த் கூறியதாவது,

பசிக்கு உணவளிக்கும் சேவை என்ற முயற்சியை எனது நண்பர் மலேசியாவில் இருக்கும் ஏ ஜி அருள் 2010 முதல் மலேசியா, மும்பை,கொலம்போ இன்னும் அநேக பகுதிகளில் இந்த பசிக்கு உணவளிக்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

சென்னையிலும் இந்த சேவையை தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

நானும் இந்த சேவையை தொடர சென்னை கோயம்பேடு மார்க்கெட் இடத்தை தேர்வு செய்து 2017 ஜனவரி மாதம் இந்த சேவையை தொடங்கினோம்.

தற்போது கடந்த ஐந்து வருடமாக 305 வாரமாக இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த 305 -வது வார அன்னதான நிகழ்வையொட்டி உணவு மற்றும் லுங்கி,சேர்த்து வழங்கினோம்.

இந்த சேவையின் மூலம் எங்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சின்னத்திரை நடிகர் பாண்டியன் ஸ்டோர் வெங்கட்,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.S.R.சுபாஷ், சின்னத்திரை நடிகை பிரேமி, மணிவண்ணன், ஏ.ஜி.அருள்(மலேசியா) பன்னீர், ஆனந்த், பிரமிளா, ஜானகி, ஸ்ரீதர், சரவணன், தியாகராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.