திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் சார்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறுகையில்:

நீதிமன்றம் அவகாசம் கொடுத்து தீர்ப்பை கொடுதது. அதை நிறைவேற்றவில்லை. ஊர் மக்கள் சார்பாக அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்டு நீதிமன்றம் சென்று உண்ணாவிரதம் இருந்து அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சியில் இருக்கும் சிவன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். நூற்றாண்டு பழமையானது என்று சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் சிவன் கோயிலுக்கும், முருகன் கோயிலுக்கும் இருக்கும் உரிமை யாருக்கும் தெரியவில்லை. வட்டாட்சியர் திருமங்கலத்தில் வைத்து கூட்டம் போட்டு நீதி வழங்குகிறார். திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இங்கு தீபம் போட்டால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
இந்துக்களை பாரபட்சத்துடன் நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். பாஜக, அண்ணா திமுக, டிடிவி தினகரன் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விருப்பப்படுகிறோம். எங்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் இன்னும் நான்கு மாதத்திற்கு பிறகு எங்கள் முகத்தில் முழித்து எப்படி ஓட்டு கேட்பார்கள் என்று கேள்விக்குறியாக உள்ளது யாரை நம்பி நாங்கள் வாழ்வது என்று தெரியாமல் காந்தி நேரு வீட்டு சிறையில் வைக்கப்பட்டது போல் நாங்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளோம். குப்பை வண்டி, தண்ணீர் வண்டி எதுவும் இல்லை. ஒரு வாரமாக RO பிளான்ட் மூடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் வெளியே சென்று உள்ளே வருவதற்கு சிரமமாக உள்ளது காவல்துறையினர் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கின்றனர்.
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்கிறார்கள் அவர்கள் யாருக்கு நண்பர் என்று தெரியவில்லை. குழந்தைகளின் கல்வியை தடுக்கிறார்கள். ஆடுமாடுக்கு வரும் புல்லுக்கட்டை தடுக்கிறார்கள். நேற்று எங்கள் பெண்கள் தீபம் ஏற்றியதை ஒரு காவலர் கிண்டல் செய்கிறார். இங்கு தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு அவர் இந்த வியாக்கியானம் இங்கு பேசுகிறார். எடப்பாடிக்கு, பாஜக நயினார் நாகேந்திரனுக்கும் ஆதரவு கேட்டு கோரிக்கை வைக்கிறோம். மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு கேட்கிறோம். அவர்களுக்கு இந்தி கூட்டணி ஆதரவு கொடுப்பதை போல எங்களுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.

அனைவரும் சமத்துவம் என்று பேசுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அதே நீதி எங்களுக்கும் கிடைக்க வேண்டும். மற்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். மதச்சார்புடன் நின்று கொண்டு மதசார்பின்மை என்று சொல்கிறார்கள் இது செக்குலரிசமா. அனைவருக்கும் வழிபாட்டு உரிமை உள்ளது எங்களுக்கு மட்டும் இல்லை என்று அரசு சொல்வதும், காவல்துறை சொல்வதும் வெட்கக்கேடான விஷயம். இதை எப்படி கிராம மக்கள் ஏற்றுக் கொள்வது. வருகின்ற ஞாயிறு அல்லது அடுத்த ஞாயிறு கூட்டம் போட்டு கிராமத்தின் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்த விரும்புகிறோம். அதற்கு அனைத்துக் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். வருபவர்கள் வரட்டும் வருபவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் எங்களுக்கு ஆதரவு தராமல் இருக்கும் கட்சிகள் நாளை தேர்தல் வரும் போது நாங்கள் ஆதரவு தர தயாராக இல்லை. இதை தமிழக முழுவதும் எடுத்து செல்வோம்.
எங்களுக்கு ஆதரவு தராமல் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வந்தால் எங்கள் கருப்பு கொடியை காட்டி கண்டனத்தை வெளிப்படுத்தவும் என்று கட்சிகளுக்கு தெரியப்படுத்துகிறோம். எங்கள் இந்துக்களை வஞ்சிப்பது எந்த முறையில் நியாயம் என்று அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டும் இது எங்களின் கோரிக்கை உங்களுக்கு ஓட்டு வாங்கி வேண்டுமென்றால் ஆயிரம் விஷயம் உள்ளது தமிழக அரசுக்கு தெரிகிறதோ இல்லையோ 4லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக இந்துக்கள் கொடுக்கிறார்கள். தமிழக பட்ஜெட்டை அதுக்குள்ள தான் இருக்கிறது. இந்துக்களிடம் பிச்சை எடுத்து பிழைக்கும் அரசுதான் இந்த அரசு. உண்டியல் பணமா குத்தகை பணமோ இல்லையென்றால் இந்த அரசாங்கமே நடத்த முடியாது. வேறு எந்த சமூகத்திடமும் இருந்தும் இந்த அரசாங்கத்தால் ஒரு ரூபாய் கூட பெற முடியாது.
இப்படி கையாலாக தனமாக இருக்கக்கூடிய அரசு நாங்கள் போடும் பிச்சைக்காசை எடுத்துக்கொண்டு எங்களுக்கு எதிராகவே நீதிமன்றம் சென்று வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுப்பதும் எந்த வகையில் நியாயம். எங்கள் கையை எடுத்து எங்கள் கண்ணை குத்த பார்க்கிறார்கள்.
36 துறைக்கும் எங்கள் உண்டியல் பணம் போகவில்லையா. அதிகாரிகளின் கார் முதல் அவர்கள் மனைவி அணிந்திருக்கும் நகை வரை எங்கள் பணம் இல்லையா. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தால் எங்களுடன் நின்று எங்களுக்காக போராட வேண்டும் இந்து அறநிலையத்துறை என்று பெயரை வைத்துக் கொண்டு இந்துக்களை எதிர்ப்பது என்ன நியாயம். யார் பணத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். எங்கள் பணத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எங்கள் எதிர்ப்பது எதனால். எங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எங்களை வஞ்சிக்கிறார்கள். எங்கள் ஒற்றுமையை பலப்படுத்தும் சூழலில் நாங்கள் இருக்கிறோம். முருகனுக்காக அதை வெளிப்படுத்த மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அதை முருகனுக்கு அற்பணிக்க உள்ளோம் அதற்கான கட்சிகளையும் அழைக்கிறோம்.
சிறையில் இருப்பது போல் இருக்கும் இந்த கோட்டை தெருவுக்கு ஆதரவு தர வேண்டும். பிரிட்டிஷ்காரோட காலத்தில் கூட இந்த கொடுமை இல்லை. ஜாலியன் வாலாபாக் போல் இன்று தினம் செத்துப் பிழைக்கிறோம். இது சுதந்திர நாடாம் இதை காட்டிலும் இந்துக்களுக்கு வேறு என்ன வேதனை உள்ளது. வருகிற ஞாயிறு அல்லது அடுத்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெறும்.




