மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் நாள் ஒன்றுக்கு வந்து செல்கின்றனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து விமானம் ஓடுதள பாதையில் வரும்போது பறவைகள் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக வெடி வெடித்து விரட்டி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையம் ஓடுதள பாதையில் பறவைகளின் இடையூறை தடுக்க 8 நவீனக் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருவியை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இக்கருவியை ஓடுதள பாதையின் இருபுறங்களும் நிறுவப்பட்டு அவற்றிலிருந்து எழும் ஒலியால் பறவைகள் ஓடுதள பகுதிக்கு வராது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்




