மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. அதனை தொடர்ந்து கணவாய் ஐயப்பன் திருக்கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் ஹரிஹரன் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அங்குள்ள கன்னி மூல கணபதி மற்றும் சிவன், முருகன் ஆகிய சிலைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





