2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தொகுதிப் பங்கீடு கோருவதற்கு முன்பாகவே இந்தக் கூட்டணியில் இந்தக் கட்சிகளுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று பல்வேறு ஆருடங்களும் கணிப்புகளும் வெளியிடப்பட்டும் செவிவழி செய்ததாக பகிரப்பட்டு வருகின்றன.

அதற்காக சமூக ஊடகங்களும் முன் நின்று செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. ஆனாலும் எந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் எந்த கட்சிக்கு கிடைக்கும் எந்த கூட்டணியில் பேசி முடிக்கப்படும் என்பதெல்லாம் அறியும் முன்னரே தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த கட்சியின் தலைமையில் தாங்கள் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாக மனுக்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் முனைப்பு காட்டினாலும் தற்போது காங்கிரஸ் கட்சியிலும் அதற்காக கட்சியின் பிரபலங்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் புதுக்கோட்டை மற்றும் விராலிமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் ஆகியோருக்கு அவர்கள் போட்டியிடும் வகையில் விருப்பமனுவினை சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில அமைப்புச் செயலாளர் ராம் மோகன் அவர்களிடம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் சூர்யா.பழனியப்பன், அன்னவாசல் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள். அனைத்து கட்சிகளிலும் உள்ள ஒரு சில நடைமுறைகளில் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் தாங்கள் வெற்றியைப் பெற்று கட்சிக்கும் கூட்டணிக்கும் பெருமை சேர்ப்போம் என்று கேட்பது ஒருவகை என்றாலும் இன்னாரை தேர்தலில் நிறுத்தினால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை செலுத்தி அவர்களுக்காக அவர்கள் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்து அவர்களுக்கான விருப்பம் மனுவையும் அதற்குரிய தொகையையும் அவரது அபிமானிகள் செலுத்துவார்கள். இதுவும் அனைத்து கட்சிகளிலும் உள்ள நடைமுறைதான்.

அந்த வகையில் தான் மாநில பொதுச் செயலாளர் பெனட் அந்தோணி ராஜ், காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோரின் பெயரில் வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன் உள்ளிட்ட பலரும் கட்சியின் தலைமை இடத்தில் மனுவையும் மனுவுக்குரிய தொகையையும் செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் படத்தில் அவர்களுக்கு அருகில் ஓபிசி அணிச் செயலாளர் ஆறுமுகம், அன்னவாசல் நகரத் தலைவர் முகமது ரபீக், முகமது கனி மற்றும் பலர் உள்ளனர்.




