ஒட்டன்சத்திரம் அருகே வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்) பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனசரகம் சத்திரப்பட்டி பிரிவு, புதூர் கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது கோட்டூர் கிராமம் கருப்பண்ணன் மகன் செல்வராஜ்(35) என்பவர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்கள்) பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து வனத்துறையினர் செல்வராஜை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளை (அவுட்காய்களை) பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.





