மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5- வது மதுரை மாவட்ட மாநாடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில்,மாவட்ட தலைவர் மகேந்திரன்,மாவட்ட செயலாளர் வெண்மனிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் தங்கமாயன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ஜோதிபாசு வாழ்த்தி பேசினார்.

இதில் மதுரை மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.,
இதில் வரும் டிசம்பர்28 அன்று தர்மபுரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 7- மாநில மாநாடு நடைபெறுகிறது.,
இதில் கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ள சூழலில் பால் விலை 1லிட்டருக்கு பசும்பால் ரூ 45, எருமை பால் ரூ 60 உயர்த்தவும், தரமான கால்நடை கலப்பு தீவனம் 50% மானிய விலை வழங்க கோரியும், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டியில் ஏற்றுவதற்கு முன்பு தரத்தையும் அளவையும் குறிக்க வேண்டும், மற்ற மாநிலங்கள் உள்ள ஐ எஸ் ஐ பார்முலாவை தமிழகத்திலும் அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.,

இதில் ஒன்றிய நிர்வாகிகள்,பால் உற்பத்தியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.,




