கோவையில் இந்தியன் வங்கி நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை – இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது.
இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை மற்றும் கண்காட்சி கோவை , புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று சர்ஃபாசி சொத்து விற்பனை மற்றும் கண்காட்சியை இந்திய வங்கியின் பொது மேலாளர் G.ராஜேஸ்வர ரெட்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், கள பொது மேலாளர் B.சுதா ராணி,கள பொது மேலாளர் அலுவலக துணை பொது மேலாளர் பிரசன்ன குமார் கோயம்புத்தூர் மண்டல மேலாளர்
C.H.வெங்கட ரமண ராவ், சேலம் மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி,திருப்பூர் மண்டல மேலாளர் G.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சி இரண்டு நாட்களுக்கும் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி நடைபெற உள்ளது.

இக்கண்காட்சி பொதுமக்கள் பங்கேற்று அவரவர் சக்திக்குட்பட்ட தொகைக்கு உரிய சொத்துகளை இந்தியன் வங்கியிடம் இருந்து வாங்குவதற்கு வாய்ப்பு தரும் வகையில் நடைபெறுகிறது. சொத்துகள் வாங்க விரும்புவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனடையுமாறு இந்தியன் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் கோவை மண்டலம் தொடர்பான சர்ஃபாசி சொத்துக்களுக்கு 63856 58389 என்ற எண்ணிலும் சேலம் மண்டலம் தொடர்பான சொத்துக்களுக்கு 90430 63133 என்ற எண்ணிலும் திருப்பூர் மண்டலம் தொடர்பான சொத்துக்களுக்கு 80727 58975 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.




