திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் மலைமீது உச்சியில் தீபம் ஏற்ற கோரி தனது உடலில் நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏற்றும் வகையில் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழுவினர் சார்பாக பூரண சந்திரன் படத்திற்கு மலர் தூவி மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன் அனுமதி இன்றி அறநிலையத்துறை உட்பட்ட கோவில் முன்பாக தீப அஞ்சலி நடத்திய காரணத்திற்காக காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழுவினர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தீப அஞ்சலி நடத்திய திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழுவினரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு நிர்வாகி சோலை கண்ணன் கூறுகையில்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாத அதை கண்டித்து பூர்ண சந்திரன் உயிரை மாய்த்துக் கொண்டார் அவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் சொக்கநாதர் கோவிலில் அவர் உருவப்படத்திற்கு தீபம் ஏற்றி மலர அஞ்சலி செலுத்தி திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு சார்பாக அவரது ஆன்மா சாந்தியடைய தீபம் ஏற்றி இருக்கிறோம். தீர்ப்பின் அடிப்படையில் அன்றைய அரசாங்கம் தீபம் ஏற்று இருந்தால் இன்று இந்த உயிர் போய் இருக்காது.
இந்த அரசாங்கம் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை உண்டாக்கி இந்த உயிர் போனதுக்கு அரசாங்கம் தான் பொறுப்பு. அதை நினைத்தால் வேதனையாக உள்ளது. அன்று 2000 பேர் கூடி இருந்தார்கள் ஆனால் ஒரு அசம்பாவிதம் கூட அருகில் பள்ளிவாசல் இருந்தும் நடைபெறவில்லை.
தூங்கி கிடக்கும் இந்துக்கள் நான் தீபமாக காட்சியளிப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காக பூரண சந்திரன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக உயிரிழந்திருக்கிறார் அவரது குடும்பம் திமுகவை சேர்ந்த குடும்பம். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவில்லை நிதி உதவி அளிக்கவில்லை இதுவே ஒரு சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தார் அஞ்சலி செலுத்தியிருப்பார்கள்.

எனக்கு நீண்ட காலமாக பாதுகாப்பு கொடுத்திருந்தார்கள் ஆனால் இன்று காலை முதல் அந்த பாதுகாப்பையும் திரும்ப பெற்றுவிட்டார்கள். எங்களை கைது செய்கிறார்கள் இது இந்த விரோத அரசாங்கம் தான் அவர்கள் சொல்வதை நாங்கள் மதிப்போம் ஆனால் நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்க மாட்டார்கள். ஆர்டிஓ சொல்வதை மதித்து கொடியேற்றுவார்கள் ஆனால் நீதிமன்ற உத்தரவை மதித்து எதுவும் செய்ய மாட்டார்கள் என சோலை கண்ணன் கூறினார்.




