மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மத்திய அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு என்று மாற்றுவதற்கு, சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மகாத்மா காந்தியின் பெயர் இருக்கக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட செயல்பாட்டினை மாற்றி அமைப்பதற்கும் , இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்




