விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் துணை சுகாதார நிலையம் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால். கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் இருந்தது.

மேலும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இட நெருக்கடியாகவும் இருந்ததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதன் பேரில் பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதியதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின்சார வசதி, குடிநீர் வசதி , செய்யப்பட்டு வருகின்றன.
கட்டிடத்தில் கிராம செவிலியருக்கான குடியிருப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான பதிவு செய்தல், மற்றும் தடுப்பூசி ஆலோசனைகள் வழங்குதல் அறை ,கழிப்பறை வசதி ,உள்ளிட்ட நவீன வசதிகள் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




