விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில்வே நிலையத்தின் முன்பதிவு மையம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படுவதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் பேரில் சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே விசாரணை, மற்றும் அவசரத் தேவைக்கான தட்கல், முன்பதிவு போன்ற வசதிகள் வழங்கப்பட்டதால் அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்ததால் ஏராளமானோர் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் சிவகாசி தலைமை காவல் நிலையத்தில் கணினி முன்பதிவுமையம் செயல்படாத என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எளிய வசதி தடை செய்யப்பட்டதால் ஏராளமானோர் மன வேதனை அடைந்துள்ளனர் அடித்தட்டு மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எளிதில் பலதரப்பட்ட மக்களால் அணுக கூடிய அஞ்சல் அலுவலகத்தில் முன்பதிவு நிறுத்தப்பட்டதால் தொழிலாக நகரமாக விளங்கும் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த கிராம மக்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்வது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
லாப நோக்கமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த முன்பதி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் இல்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் செய்யது ஜாகீங்கீர் தலைமையில் நிர்வாகிகள் தாதாமியான், முகமது கான், முத்துஷலசா மற்றும் இக்பால் ஆகிய நிர்வாகிகள் சிவகாசி தலைமை நிலைய தபால் அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர்.




