கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டி, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் பேரில் அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் விண்ணப்பம் செய்தார்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், ஒன்றிய பொருளாளர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கொட்டாரம் பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.





