கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார சங்க அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று கார்த்திகை மாத கடைசி ஐந்தாவது சோமவாரம் வந்ததை ஒட்டி 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சங்குகளில் நாணயம் மற்றும் தீர்த்தம் வைத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

பின்னர் உற்சவர் சிவன் பார்வதிக்கு பால் தயிர் பன்னீர் திருமஞ்சனம் சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்கரித்து பூஜை வைக்கப்பட்ட 108 சங்குகளில் இருந்த தீர்த்தம் உற்சவருக்கு ஊற்றப்பட்டு சங்க அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அலங்காரங்கள் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை வில்லாபுரம் சங்க விநாயர் கோவில் அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார் கார்த்திகை சோமவார சங்காபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




