• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Dec 15, 2025

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பாள் தாயார் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கார்த்திகை கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் – ஸ்ரீ சுந்தராம்பாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆலய தனி அதிகாரி காளிதாஸ், ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீகைலாசநாதருக்கும் ,சுந்தராம்பாள் தாயாருக்கும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.