மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 80) இவர் 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பாக உட்கார்ந்து இருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.


அவர் இறுக்கி பிடித்து சப்தம் போட்டதில் செயின் அறுத்தது அதில் 3 பவுன் செயினை அறுத்துக் கொண்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்தனர்.


அப்போது அந்த மர்ம நபர்களின் அடையாளம் தெரியவந்தது விசாரணையில் அவர்கள் அதே ஊரைச் சேர்ந்த சந்தோஷ் பரமன்(23) கருப்புசாமி(23) தென்னரசு(23) என்பதால் அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.





