மதுரை புறநகர் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை படி அ.தி.மு.க 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் கழக கட்சி அலுவலகம் முன்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தன் சொந்த செலவில் 54 அடி உயர கொடி கம்பம் அமைத்தார்.


அதில் வாடிப்பட்டியில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருக்கரத்தால் கொடியேற்றி சிறப்பு செய்தார். அதற்காகவும், சிறப்பான முறையில் முளைப்பாரி, தாரை தப்பட்டையுடன் வரவேற்பு கொடுத்ததற்காகவும் நேரில் அழைத்து பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமாரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.





