திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் பொதுமக்கள் சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.


இந் நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது கிராம பொதுமக்களுக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்தது .

அந்த தீர்ப்பு நகலை திருப்பரங்குன்றம் பொதுமக்கள் ஒரு பிரிவினர் சார்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழங்கி பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த பிரபு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்:
நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக நாங்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தோம் அவர்கள் அந்த மனுவை நிராகரித்ததன் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று நாளை திருப்பரங்குன்றம் பொதுமக்கள் சார்பாக ஜாதி மத பேதம் இன்றி கட்சி சாயமில்லாமல் ஊர் மக்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளோம்.
திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் நீதிமன்றம் நிபந்தனைகள் விரித்துள்ளது அதை மீறாமல் பங்கேற்க சொல்லி இருக்கிறோம். பெண்கள் தான் முதலில் பங்கேற்கிறார்கள்.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் முக்கிய கோரிக்கை சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரவி வருகிறது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றுவதாக சொல்கிறார்கள் ஆனால் எங்களுக்கு தெரிந்தவரை அதிகபட்சம் 20 ஆண்டுகள் கூட ஏற்றி இருக்க மாட்டார்கள். அங்கு ஏற்றியதற்கு காரணமும் சில இயக்கங்கள் தீபத்தூணில் தொடர்ச்சியாக 60 ஆண்டுகளாக போராடுகிறார்கள் அதை திசை திருப்புவதற்காக தான் உச்சிப் பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றும் சம்பிரதாயம் தொடங்கியது.

அந்த உச்சிப்பிள்ளையார் கோவில் மோட்சம் ஏற்றும் இடம் தான். வீட்டில் உள்ளவர்கள் இறந்தால் கார்த்திகை மாதம் வீட்டில் விளக்கேற்ற மாட்டோம் அதுதான் தமிழ் மரபும். அப்படி இருக்கும்போது தினமும் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது எந்த வகையில் சரியாக வரும் என்பதுதான் பொதுமக்களின் கேள்வி இது நெடுநாளாகவே உறுத்தலாக இருந்தது. ஏன் திடீர்னு போது மக்கள் கேட்கிறீர்கள் என்று கேட்டால் இவ்வளவு நாட்கள் மரபை தான் மீறி இருந்தார்கள். அதனால் பொதுமக்கள் அமைதியாக இருந்தோம். தற்போது சட்டத்தையும் மீறுகிறார்கள் அதனால் நாங்கள் கேள்வி கேட்கும் கட்டாயத்திற்கு வந்துள்ளோம். தற்போது வரை மோட்ச தீபம் அங்கு ஏற்றுகிறார்கள்.
காவல்துறை அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்று நினைக்கிறோம். அதை மீறி எதுவும் என்றாலும் சட்டப்படி அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
நாங்கள் நீதிமன்ற உத்தரவை மீற மாட்டோம் அந்த உத்தரவில் உள்ள படி நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துவோம். பாதுகாப்பு வழங்குவதாக தற்போது வரை சொல்லியிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தை சுற்றி இருக்கும் 48 கிராம மக்களுக்கு தகவல் சொல்லி இருக்கிறோம். மேலும் வேறொரு தேதியில் அந்தந்த கிராம மக்கள் அவர்கள் கிராமத்தில் தனிப்பட்ட முறையில் செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் உள்ளூர் பொது மக்களை வைத்து நடத்துகிறோம் எனக் கூறினார்.




