திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த தின ” வைர” விழாவும் திரைப்பட நடிகராக 50 ஆண்டுகள் சாதனைக்காக தங்க தேர் இழுக்கப்பட்டது .

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 75வது “வைர விழா” பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திரைப்பட நடிகராக 50 ஆண்டு சாதனையை “பொன்விழா” ஆண்டnகவும் கொண்டாடிய ரசிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் பூரண நலம் பெறவும் படையப்பா திரைப்படம் இரண்டாவது வெளியீடு வெற்றி பெறவும் ரஜினி ரசிகர்கள் சார்பில் தங்க தேர் நிர்வாகிகளால் எடுக்கப்பட்டது .


இது குறித்து திருப்பரங்குன்றம் ரஜினி மன்ற நகர நகர செயலாளர் கோல்டன் சரவணன் கூறுகையில் சூப்பர் ஸ்டார் அவர்கள் 75வது வைர விழா கொண்டாட்டமும் திரைப்பட உலகில் நடிகராக 50 ஆண்டு சாதனையை பொன்விழா ஆண்டாகவும் ரஜினிகாந்த் அவர்கள் மற்றும் குடும்பத்தினர் பூரண நலம் வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது. மேலும் படையப்பா திரைப்படம் இரண்டாவது வெளியீடு அருகில் உள்ளது அதை வெற்றியடையவும் திருப்பரங்குன்றம் கோயில் கோவிலில் பிரார்த்தனை செய்தோம் மேலும் இன்று காலை திருநகரில் உள்ள கருணை இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது




