வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கும் சரி பார்ப்பதற்கும் இன்றுடன் முடிந்து விட்ட நிலையில் புதுக்கோட்டை திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள 42 வார்டுகளிலும் 42 ஆவது வார்டு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பு தொடங்கியது.

42 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கவி வேந்தன் ஏற்பாட்டில் அந்த பகுதியில் வட்டக் கழகச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் வந்து இந்த வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப் பித்தன் திமுக புதுக்கோட்டை மாநகர வடக்கு செயலாளர் லியாகத் அலி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே. கே.செல்லபாண்டியன் அவைத் தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் இதுவரை கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி வீடுகள் தோறும் எவ்வாறு வாக்குகள் சேகரிப்பது என்பது குறித்து திமுகவில் உள்ள மகளிர் அணியினருக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அந்த வகையில் இப்போதே தேர்தல் பணி தொடங்கிவிட்டது. இது புதுக்கோட்டை மாநகர் பகுதியில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




