விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ,உள்ளிட்ட 11 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் விஜய கரிசல்குளத்தில் உள்ள வழி விடு பாலமுருகன் கோயிலிலும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.





