விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரம் கிராமம் உள்ளது. சுப்பிரமணியபுரத்தில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேறாமல் பல நாட்களாக தேங்கியுள்ளது. மேலும் நிழற்குடைகுள் அமரும் இடத்தில் பளிங்கு தரையாக இருப்பதால் வழுக்கி விழும் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ,நிழற்குடை இருந்தும் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை முன்பு தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.




