மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் அக்கட்சியினர்
மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கூறியதாவது.


இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்ட புத்தகம் துணை நிற்கும். 2001 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை சோரம் போகாத காங்கிரஸ் தொண்டர்கள் சோழவந்தான் தொகுதியில் உள்ளனர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னம்மாள் சந்திரசேகர் காலத்தில் இருந்து காங்கிரஸ் சோழவந்தான் தொகுதியில் வலுவாக இருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த தொகுதியை கேட்டு பெறுவோம். தேர்தல் வெற்றி என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். காங்கிரஸ் திமுக கூட்டணி உடைய வாய்ப்பில்லை விஜய்யுடன் பேசியது குறித்து காங்கிரஸ் தலைமை தான் அறிவிக்க வேண்டும். என்று கூறியவர்,
தொடர்ந்து ஆணித்தரமாக இந்த தொகுதியை காங்கிரஸ் கேட்கும் கேட்கும் கேட்கும் என்று மூன்று முறை அடித்துக் கூறினார்.
திமுக வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் 20க்கும் மேற்பட்ட கார்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து விஸ்வநாதன் கூறுகையில் சோழவந்தான் தொகுதியை திமுகவிடமிருந்து பெற்றுத்தர காங்கிரஸ் மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மாவட்டத்திற்கு இரண்டு தொகுதிகள் வீதம் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சி பங்குபெறும் இவ்வாறு பேசினார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சோழவந்தான் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது திமுக தலைமைக்கு இது புது தலைவலியாக அமையும் என்று சோழவந்தான் தொகுதி அரசியல் பிரமுகர்கள் கூறுகின்றனர்.




