சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராசு, மாவட்ட காப்பாளர் அக்ரி. ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் சின்னசாமி, விசிக மாவட்ட செயலாளர் (மே) ரத்தினவேல், திமுக பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பெருந்திரளாக பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.





