விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்குவார்பட்டி கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் செல்லப்பாண்டி, பாண்டி மீனா தம்பதியினர் கூலி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தங்கேஸ்வரன் நரேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இரண்டு மகன்களுக்கும் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவ செலவுக்கு சிரமப்படுவதாக தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுக்குவார்பட்டி கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று குடும்ப சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக தங்கைஸ்வரன் நரேஷ் இரண்டு சிறுவர்களையும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் அதற்கு ஏற்படும் செய்யுமாறு மருத்துவர் களை கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவச் செலவிற்கும் இதர செலவிற்கும் ரூபாய் ஐம்பதாயிரம் நிதியினை செல்ல பண்டி, பாண்டி மீனா ஆகியோரிடம் வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மருத்துவர் அணி கழக இணை செயலாளருமான சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.








