மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி பெரியகற்பூரம்பட்டியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2017-2018-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இக்கட்டிடம் பழுதாகி சிமெண்ட் பூச்சுகள் எடுபட்டு செங்கல் தெரிகிறது.
மேற்கூரை தட்டோடு சரியாக பாதிக்காததால் புற்கள்,மரங்கள் முளைத்து மழை பெய்தால் கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது.
அங்கான்வாடியில் குழந்தைகளுக்கு கழிப்பறை கட்டிடமும் கிடையாது.
இதனால் அங்கு குழந்தைகள் அபாயகரமான சூழலில் இருக்கும் நிலை உள்ளது.
இந்த கட்டிடத்தில் பராமரிப்பு வேலைகள் செய்யக்கோரி பெற்றோர்கள் பலமுறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே குழந்தைகள் நலனை பாதுகாக்க மதுரை மாவட்ட ஆட்சியரும்,தமிழ்நாடு அரசும் இந்த அங்கான்வாடி கட்டிடத்தை பராமரிப்பு வேலைகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகற்பூரம்பட்டி பெற்றோர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.








