மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை ஏழு மணி அளவில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த இரு தினங்களாக மதுரையில் வானம் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே மழை வெளுத்து வாங்கியது பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்கியது.
மேலும் அரை மணி நேரத்திற்கு மேல் விடாமல் கன மழை பெய்ததால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது, அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழை நீரில் நடந்து சென்ற வாரே சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கழட்டி விட்டு சென்ற சிறப்புகள் திடீர் மலையில் அடித்துச் செல்லப்பட்டது. மழை விட்டதும் வந்த பக்தர்கள் செருப்பை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.








