• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜி.என்.எஸ் ராஜசேகரன் உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

ByM.I.MOHAMMED FAROOK

Dec 2, 2025

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏழை எளிய மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி அத்திப்படுகை, பேட்டை, அரங்கநகர், தேனுர், செருமாவிளங்கை, நெய்வாச்சேரி, கீழ்தென்னங்குடி, சுரக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த சுமார் 20,000 மேற்பட்ட குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக தயாரித்த மதிய உணவு வழங்கப்பட்டது.

  திருநள்ளாறு பகுதியில் இரண்டு தனியார் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து அங்கேயே சமைத்து 30க்கும் மேற்பட்ட tata ace வாகனங்களில் வீதிகளாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. முன்னதாக சமைக்கப்பட்ட  உணவினை சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உண்டு உணவின்  தரத்தை பரிசோதித்தார் அதனைத் தொடர்ந்து உணவு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.