காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தலத்தெரு கிராம மக்களுக்கு காரைக்கால் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா ஏற்பாட்டில் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேருக்கு மதிய உணவை மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று வழங்கினார்.

மக்களின் நிலை அறிந்து உணவு வழங்கிய மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மளாவுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மளா எழை எளிய மக்களுக்காக காங்கிரஸ் இயக்கம் எப்போதுமே இருக்கும் எனவும் இப்பணி தொடரும் எனவும் தெரிவித்தார்.








