• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு தொடக்க விழா..,

ByVasanth Siddharthan

Nov 30, 2025

திண்டுக்கல்லில் புதியதாக அறம் சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) மண்டல இயக்குனர் பியூஷ் கே. சர்மா மற்றும் CBSE பள்ளிகள் மேலாண்மை சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த CBSE மண்டல இயக்குனர் பியூஷ் கே. சர்மா மற்றும் பிரதிநிதிகள் ‌ தெரிவிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2,000 பள்ளிகளும், நாடு முழுவதும் 32,000 CBSE பள்ளிகளும் உள்ளன.

திண்டுக்கல் பள்ளிகளுக்கான சஹோதயா கூட்டமைப்பைத் தொடங்கியதன் மூலம், மாணவர்களின் கல்வி மற்றும் இணைப் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

வெறும் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிலும் ஒருங்கிணைந்த போட்டிகளை நடத்துவதான் மூலம் கிராமப்புறப் பள்ளிகள் திண்டுக்கல்லுக்கு வரும்போது, அங்குள்ள பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் வெளிப்பாடு கிடைக்கும்‌‌

ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அதிக அளவிலான கல்வித் திட்டங்களை கொண்டு வருவது போன்ற திட்டங்கள் உள்ளன

தரமான பள்ளிகளின் வினாத்தாள் முறைகளை அனைவருமே ஒரே மாதிரியாகப் பயன்படுத்திக்கொள்ள பரிமாற்றம் செய்ய ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும்

அறிவியல், பொது அறிவு, கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்றவற்றுக்கு ஒலிம்பியாட் தேர்வுகள் இருப்பதுபோல், தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தமிழ் ஒலிம்பியாட் தேர்வுகளும் அனைத்து CBSE பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.