• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

த.வெ.க நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி..,

BySeenu

Nov 28, 2025

கோவை விமான நிலையமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி

கட்சி இரு பிரிவுகளாக இருந்த பொழுது ஜெயலலிதாவுடன் இருந்தேன்.

இன்று மக்கள் சக்தியாக இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர் எந்த தடை இருந்தாலும் மக்கள் சக்தி மூலமாக 2026 அவர் தமிழகத்தில் முதலமைச்சராக மக்கள் சக்தியாக அவர் அறியணையில் அமர்வார்

2026 இல் முதலமைச்சராக அமர்வதை மக்களே முழு மனதாக ஏற்றுக்கொண்டு மக்கள் சக்தியாக அவர் அரியணையில் அமர்வார்.

அப்படி அமர்வதற்கு இங்கு இருக்கின்ற உணர்ச்சி பூர்வமான அவரது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஏறத்தாழ 4 மணி நேரம் இங்கு காத்திருந்து , ஒரு சாதாரண தொண்டரான என்னை வரவேற்க காத்திருக்கின்றனர்.

வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
அது மக்கள் சக்தியாக மாறி இருக்கின்றது.

மக்கள் சக்தி மூலமாக தமிழகத்தில் ஒரு மாற்றத்தை புதிய சமுதாயத்தை உருவாக்க ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க புறப்பட்டு இருக்கிறார்.

அவரது பயணம் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக அவர் அமர்வார்.
மக்கள் சக்தியோடு அவர் அமர்வார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது.

வெற்றி என்ற நிலையில் அவரது பயணம் மேலும் மேலும் மக்களுக்காக மக்கள் சேவைக்காக இருக்கும்.

ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வந்தாலும் கூட அதை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளார்.

புனித ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நான் இடம்பெற்று இருக்கிறேன்.

இவர்களோடு சேர்ந்து என் உயிர் மூச்சு உள்ளவரை இருப்பேன்.
மேலும் புதியதாக புரட்சித் தலைவர் ஆட்சி தோன்றிய பொழுது அண்ணாயிசம் என்றால் என்ன கேட்டார்கள். அதுபோல எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், எல்லோருக்கும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என மனித நேயத்தோடு அறிவித்திருக்கிறார்.

இரண்டு ஆட்சி நடந்து கொண்டு இருந்த நிலையில், புரட்சித்தலைவர் வழியிலும், புரட்சித்தலைவி அம்மா வழியிலும் புனித ஆட்சி நடந்த்து.

தற்பொழுது நடந்து கொண்டிருக்கிற இரண்டு ஆட்சியும் மாற்றப்பட வேண்டும் புதிய மக்கள் சக்தியாக விரைவில் உருவாகும். எந்த சக்தியாலும் அதை முறியடிக்க முடியாது.

ஜெயலலிதா படத்தை வைத்திருக்கின்றீர்களே என கேட்டார்கள். இங்கே ஜனநாயகம் இருக்கிறது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை தெளிவாக சொன்னேன்.

இன்று அவருடைய வாகனம் செல்கின்ற பொழுது ஒருபுறம் புரட்சித் தலைவர் மற்றொருபுறம் அண்ணா படம் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் உருவாக்க புரட்சித்தலைவர் வழியில், புரட்சித்தலைவி அம்மா வழியில், இன்று பயணிக்க இருக்கின்றோம். மூன்றாவதாக மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும்

என்னை பொருத்தவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். எனக்கு பின்னால் மக்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. அதை மக்களை பார்த்துக்கொள்வார்கள்.

மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கின்றனர். நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டுவான் என செங்கோட்டையன் பேட்டி.