• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவல் ஆய்வாளர் ஓசியில் சாப்பாடு வாங்கிய பில் வைரல்..,

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் போட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதால் கட்டுப்படி ஆகாததால் உணவு தர ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளனர்.

இதனால் ஆய்வாளர் பிரபு உணவகத்தில் வெளியில் போர்டு ஒன்றை வைத்து வாகனங்களை நிறுத்த விடாமல் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் ஆய்வாளர் ஓசியில் உணவு வாங்கிய பில்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.