மதுரை விமான நிலையம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை டெல்லி என உள்நாட்டு விமான சேவைகளும் சிங்கப்பூர்,துபாய், இலங்கை, அபுதாபி போன்ற வெளிநாட்டு விமான சேவைகளும் வழங்கி வருகிறது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மதுரை விமான நிலையத்திற்கு போன் மற்றும் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் ஈடுபட்டனர். இதில் விமான நிலைய முனைய மேலாளர்க்கு போன் கால் மூலம் விமான நிலையம் புறப்பாடு அறையில் பயணிகளின் பையில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைக்கிறது.

உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய்கள் கொண்டு அங்கு விரைந்து பயணிகள் அனைவரையும் பரிசோதிக்கின்றனர். பின்னர் பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு இருக்கும் பையை கண்டுபிடித்து அதனை விமான நிலையம் வெளியே கொண்டு வந்து வெடிகுண்டை அப்புறப்படுத்துவது போல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.








