சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு .
நவம்பர் 26 இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் இந்த நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்துகிறோம்.
அல்லும் பகலும் அயராத அவர் பாடுபட்டு உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் புதிய இந்தியாவை கட்டமைத்துள்ளது.

அவரின் கனவை நினைவாக்குகிற ஒரு மகத்தான ஆவணம் தான் அரசியலமைப்பு சட்டம். ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெறுகிறது இன்று.
சனாதன சக்திகளால் இந்தியா அரசியலமைப்பு சட்டத்திற்கு பேராபத்து வந்துள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். எஸ் ஐ ஆர் என்பது 15 மாநிலங்களில் நடைபெறுகிறது. கடந்த காலத்தில் எஸ் ஐ ஆர் நடைபெற்றது என்று தேர்தலானையம் சொன்னாலும் அது பேசு பொருளாக அப்போதாகவில்லை.
இந்த முறை விவாதம் நடைபெறுகிறது. இது வாக்காளர் பட்டியல் சீராய்வாக இல்லாமல் இந்திய குடியுரிமையை சீராய்வு செய்கிற புது நடைமுறையாக உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும் கூட தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பாஜக ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையை சோதனைக்கு உள்ளாக்குகிறது.
ஆகவே கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிக்கும் நாடற்ற மக்களாகாக்கும் வருங்காலத்தில் நாடற்றவர்களாக ஆக்கும் கொடுமை நடைபெறும் அதனால்தான் எஸ் ஐ ஆர் என்கிற நடைமுறை கூடாது.
வழக்கமான வாக்காளர் சீராய்வு பணி போதும் என்று வலியுறுத்துகிறோம். ஜனநாயக சக்திகள் தேசிய அளவில் நடைமுறைப்படுத்த ஒன்றுபட வேண்டும்.
செங்கோட்டையன் அவர்கள் அதிமுகவின் மூத்த தலைவர் அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவர் வெளியேறும் நிலை அதிமுகவில் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு இது பின்னடைவாக தான் இருக்கும். தனிப்பட்ட முறையில் செங்கோட்டையில் இந்த முடிவை எடுத்திருந்தால் இந்த கருத்தும் சொல்லத் தேவையில்ல

ஆனால் இதன் பின்னணியில் பாஜக ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகளில் கைகளும் நீண்டிருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அவர் பாஜகவினார் சந்தித்து அழைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இந்த கருத்தை நான் தொடக்கத்திலிருந்து ஒரு பயணத்தை பதிவு செய்து வருகிறேன் அதிமுகவை பலவீனப்படுத்துவதை சதித்திட்டமாக பாஜக செயல்படுத்துகிறது. அது அதிமுகவுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதில்லை.
அதிமுக தலைமை இதற்கு தீவிரமாக சிந்திக்கும் என்று நான் நினைக்கிறேன்
ஆளுநர் திரும்பத் திரும்ப தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் திராவிட அரசியலுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள பாகுபாடுகளை வைத்து அரசியல் முரண்பாடுகளை வளர்க்கிறார். அவரை திரும்ப பெற வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் ஆனால் அவரை பயன்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது வருத்தமளிக்கிறது.
சுதந்திரப் போராட்ட தியாகி பொல்லான் அவர்களின் நினைவு மணிமண்ண்டபத்தை முதல்வர் திறந்து வைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.








