கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, மூன்று முக்கியமான பிரிவுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 32.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், வாக்குச் சாவடி அலுவலர்கள் நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், மூன்று பிரிவுகளில் வரும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. வாக்குச் சாவடி அலுவலர்கள் மூன்று, முறை சென்றும் பூட்டியே கிடந்த வீடுகள் கணக்கிடப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன் குமார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி சிறப்பு தீவிர திருத்தம் கோவை மாவட்டத்தில் நவம்பர் 4 ம் தேதி தொடங்கி, அழைத்து வாக்குச்சாவடி அலுவலர்களால் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து கணக்கீடு படிவங்களை திருப்பி பெற்றுக் கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வகையில் வாக்காளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், சுலபமாக விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி அலுவலர் இடம் சமர்ப்பிப்பதற்கு உங்கள் பகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர் நேரடியாக வந்து, (மொபைல் ஹெல்ப் டெஸ்க்) வாகனங்கள் மூலமாக வந்து இந்த கணக்கீடு படிவத்தை திரும்ப பெற்றுக் கொள்வார் என்றும், இந்த வசதியை எல்லா வாக்காளர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.








