கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது.
பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோட்டார் பகுதியில் இருந்து 12_கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள. இராஜாவூர்
புனித மைக்கல் ஆண்டவர் ஆலயத்தை சேர்ந்த இறைமக்கள் கொண்டு வந்த
திருக்கொடி.

ஆலயத்தில் அர்ச்சிக்கப்பட்ட கொடி, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.
திருவிழாவின் முக்கிய அம்சமான 10 ஆம் நாள் தேர் பவனி நடக்கிறது. அன்று, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.








