தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட சிறப்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவி மலையடிவாரத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து ஓராண்டு பயிரான கரும்பு 6 மாதங்கள் வளர்ந்திருந்த நிலையில்,

இப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது பெய்து வந்த மழை பலத்த காற்றுடன் கூடிய கனமழையாக பெய்து, 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 மாத பயிராக இருந்த கரும்புகள் முழுவதும் சாய்ந்தும் , உடைந்தும் சேதமானது.
இதனால் 1 ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் என 6 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், மிகுந்த வேதனை அடைந்துள்ள விவசாயி ரவி கடன் வாங்கி கரும்பு விவசாயம் செய்து வந்த நிலையில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 6 ஏக்கரிலான கரும்பு பயிர் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயி ரவி கூறுகையில்
எனது விவசாய நிலத்தில் கடந்த ஆண்டு எந்த பயிறும் பயிரிடாமல் வைத்திருந்தேன் இந்த ஆண்டுதான் வட்டிக்கு கடன் பெற்று கரும்பு பயிரிட்டி விவசாயம் செய்து வந்தேன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பயிரிடப்பட்ட கரும்பு சேதம் அடைந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் மன வேதனையில் உள்ளதாகவும் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் என ஆறு ஏக்கருக்கு ஆறு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.








