கோவையின் வளர்ச்சியைத் தடுக்கும்விதமாக மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான DPR-ஐ (Detailed Project Report) வேண்டுமென்றே சரியாக தயாரிக்காமல், அதற்குப் பொறுப்பை மத்திய அரசின்மீது திமுக அரசு தள்ளுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

அத்துடன், திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே போதைப் பொருட்கள் சுதந்திரமாக விற்பனை செய்யப்படுவதையும் அரசு பெரிதாக கவனிக்காமல் இருப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் கோவைக்கு வருவது எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது.








