சுசீந்திரத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஆரத்தி, அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.








