திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பைகள் அதிக அளவில் மலை போல் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பைகள் கொட்ட நீதிமன்றத்தை அணுகி தடை பெற்ற போதும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து தீப்பற்றி எரிந்த தன் விளைவாக புகையானது குடியிருப்பு பகுதாய் சூழ்ந்ததால் குழந்தைகள்,முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சு விட சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து இது குறித்த அப்பகுதியினர் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியினரே தீயை அணைத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.









; ?>)
; ?>)
; ?>)
