• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தினம்..,

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த மீன்கள் மத்தியில் மீனவ ஆண்களும் பெண்களும் சமவெளி மக்களும் இணைந்து உலக மீனவர் தினம் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தெற்காசிய மீனவர் தோழமை வளைகுடா நாடு ஒருங்கிணைப்பாளர் பிராஞ்சிஸ் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

உலக மீனவர் தின கொண்டாட்டத்தின் போது 60 வருடங்களாக தொடர்ந்து பாரம்பரிய மீன்பிடித்தல் ஈடுபட்டுள்ள அப்ளிகேஷன் என்ற 80 வயது மீனவருக்கும், 45 வருடமாக தலைசுமாடு மீன் விற்பனை செய்து கொண்டிருக்கக் கூடிய ஆக்னஸ் அவர்களுக்கும், முதிர்ந்த மீனவர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்கும் பாரம்பரிய மீன் பிடி தொழிலை ஏற்பாடு செய்து கொடுத்த திரு ஆண்டனி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பட்டது.

ஆழ்கடலில் கடல்வாழ் மீன் இனங்களை அழிக்கக்கூடிய ஆழ்கடலில் 28 பகுதிகளில் எரிவாய் மற்றும் எண்ணெய் கிணறுகளுக்கு சர்வதேச ஒப்பந்தம் அளித்ததையும் ; நான்கு லட்சம் கோடி முதலீட்டில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் கடலுக்கு அடியிலும் கடற்கரையிலும் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதையும் ; கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்ட்டர் நிலத்தில் தாது மணல் எடுப்பதற்கு இந்திய அரிய மணலாலை நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் இயற்கையையும் காத்திட ஒன்றிணைந்து செயல்படுவது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் கூறியதாவது: மத்திய அரசு ஆண்கடல் மீன்பிடித்தலுக்கு மானிய வழங்கி ஊக்குவிப்பது போன்று பாரம்பரிய கரைகடல் பகுதி கரடி மீனவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கவும், பாரம்பரிய மீன் பிடித்தலுக்கான உபகரணங்களுக்கு வரியை ரத்து செய்யவும், பாரம்பரிய மீன்பிடித்தலுக்கான உபகரணங்களை மானியத்தில் வழங்கவும், கடலிலே மாயமாக கூடிய மற்றும் மருத்துவ உதவி கிடைக்கப்பெறாமல் கடலில் இறந்து போகின்ற அனைத்து மீனவர்களையும் மத்திய மாநில அரசுகள் 50 லட்ச ரூபாய் காப்பீடு செய்து குடும்பங்களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மீனவர்கள் விசைப்படகிலே ஆழ்கடல் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் தற்போது இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க தெரியவில்லை என்று கூறி கடல் பரப்பை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து மீனவர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கின்ற ஆழ்கடல் எரிவாயு, எண்ணெய் கிணறு திட்டங்களை அரசு கைவிடகவும், கரைகடல் பகுதியிலே அரசு அமைக்க திட்டமிட்டுள்ள காற்றாலையை திட்டத்தை கைவிடவும், மீனவர்களுக்கு ஆழ்கடலில் விபத்து ஏற்படுகின்ற பொழுது உடனடியாக மீட்டு வர கடல் ஆம்புலன்ஸ் ஏற்படுத்தவும், மீனவருடைய உயிர் பாதுகாப்புக்காக அனைவருக்கும் ரேடியோ டெலிபோன் வழங்கும் படியாகவும் மீனவர்களுக்காக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆலைகளின் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு விலை நிர்ணயமே செய்யப்படுவது போன்று கடலில் மீனவர்கள் இரவு பகலாக தங்கி உயிரைப் பனையம் வைத்து பிடித்த மீனுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து அரசு தாமே மீனவர்கள் பிடித்து வருகின்ற மீனை கொள்முதல் செய்யும்படியாகவும், பாரம்பரிய மீனவர்களுக்கு வாழ்வாரத்தை உயர்த்தும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.

மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு விரோதமான கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எதிரான எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த கூடாது அவற்றை உடனடியாக கைவிட்டு கடலை கடல் வாழ் உயிரினங்களையும் உயிரினங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தான் சிறையில் 25 மாதங்களாக வாடும் குளச்சல், சென்னை, மேற்குவங்கம் 14 மீனவர்களுக்கு விடுவிக்க வேண்டும் குவைத் சிறையில் 20 மாதமாக வாடும் ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க வேண்டும். 18 மாதமாக சவுதி அரேபியா சிறையில் வாடும் முட்டம் மற்றும் நாகபட்டணம் ஐந்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

குளச்சல் மீன் பிடித்தமாக வியாபாரி சங்க உறுப்பினர் ரெக்சன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இறுதியில் திரு ஆரோக்கியராஜ் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி, பாரம்பரிய மீனவர்களை கௌரவிக்க உதவிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கும் நன்றி கூறினார்.