மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர் கழக அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்தும், எஸ்.ஐ.ஆர் பணிகளில் பாக முகவர்கள் எவ்வளவு பங்களிப்பது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.,

எஸ்.ஐ.ஆர். பணிகளில் வாக்காளர்களுக்கு எவ்வளவு உதவ வேண்டும் என ஆலோசனைகளை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்., மேலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 38 ஆயிரம் பேரை சேர்த்துள்ளோம் என பெருமிதம் தெரிவித்தார்.,
இக்கூட்டத்தில் நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன், சுதாகரன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.,








; ?>)
; ?>)
; ?>)